மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..சேலத்தில் பரபரப்பு..!

share on:
Classic

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் மற்றும் சோதனை சம்பவங்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

sajeev