இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி : பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு..!!

share on:
Classic

இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. 

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டன. ராணுவத்தின் அறிவுரையின்பேரில் அனைத்து தேவாலயங்களையும் மூடியதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கு எந்த பிரார்த்தனையும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொழும்புவில் உள்ள மத்திய வங்கி மூடப்பட்டுள்ளது. பாதுக்காப்பு பணிகளில் ஒரே இரவில் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் பணியில் உள்ளனர். ராணுவத்தில் 1,300-ஆக இருந்த எண்ணிக்கை 6,300-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் விமானப்படையிலும் 2,000 பேர் அதிகமாக பணியில் உள்ளனர். மேலும் இலங்கை முழுவதுமே வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த கொடூர தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 360 பேர் உயிரிழந்ததுடன், 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், உள்ளூர் தீவிரவாதிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya