புத்தகப் பிரியர்களே தயாராகுங்கள்.. 1.5 கோடி புத்தகங்கள் காத்திருக்கின்றன..!

share on:
Classic

சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்களுக்காக 1.5 கோடி புத்தகங்கள் காத்திருக்கின்றன....!

 

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
- லெனின்

 

மெரினா, வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம் எனபல அடையாளங்கள் இருந்தாலும், சென்னை புத்தகக் கண்காட்சியும் சென்னையை முக்கிய அடையாளமாகவே மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. ஜனவரி 4-ம் தேதி தொடங்கும் இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 42-வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சிக்காக சென்னையில் உள்ள புத்தகப் பிரியர்கள் தற்போதே தயாராகி விட்டனர். 

 

புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் புத்தகங்களுக்கு மட்டும் 487 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் இந்த கண்காட்சியில் இலக்கியம், இசை, சினிமா, உணவு உள்ளிட்ட 12 லட்சம் தலைப்புகளின் கீழ் 1.5 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது. ஆன்லைன் மூலமாக எந்த அரங்கில் எந்த தலைப்பில் என்ன புத்தகங்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காட்சிக்கு வரும் புத்தகப்பிரியர்களுக்கு இலவச வைஃபை , குடிநீர், கழிவறை, ஏடிஎம் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

 

புத்தகம் - சிறந்த வழிகாட்டி :

என்னதான் ஸ்மார்ட் போனுடன் நாம் வலம் வந்தாலும், ஒரு புத்தகத்தை படித்து அதன் மூலம் பெறும் அறிவிற்கு ஈடாகாது. இதை உணர்ந்து தான் பல லட்சம் மக்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருடந்தோறும் மறவாமல் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். ஒரு நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்குச் சமம் என்பார்கள். அதைப்போல இந்த ஆண்டும் நல்ல புத்தகங்களை தேர்வு செய்து படித்து வெற்றியை நோக்கி முன்னேற முற்படுவோம். 

 

 

 

News Counter: 
100
Loading...

aravind