இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு..!

share on:
Classic

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்படவுள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக தெரசா மே, கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளுங்கட்சி தலைவரே நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் பிரதமரை தேர்வு செய்ய ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்தநிலையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் போரிஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan