மோடி ஆட்சியும், எடப்பாடி ஆட்சியும் தூக்கி எறியப்படும் - மு.க.ஸ்டாலின்

share on:
Classic

தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியும் தூக்கி எறியப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காத்தவராயனை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே மக்களிடையே பேசிய அவர், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு எப்படியாவது தேர்தலை நிறுத்தினால், குடியாத்தம், ஆம்பூர் தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நிறுத்திவிட ஆளும் அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், திமுகவினர் மற்றும் வியாபாரிகளின் பணத்தை மட்டுமே வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் பிடிப்பதாகவும், கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் சுமார் 650 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு அதிமுக செலவழித்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இத்தேர்தலுடன் மோடி ஆட்சியும், பழனிசாமி ஆட்சியும் தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் “மக்களவை தேர்தலில் 40-க்கு 40 போன்று, 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி உறுதி” என்றும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan