ஒரே ஒரு Ball , ஆறு Wide, மொத்த டீமும் க்ளோஸ் !....வைரல் வீடியோ

share on:
Classic

ஆந்திராவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் பந்து வீச்சாளர் போட்ட 6 அகல (Wide) பந்தினால் எதிரணி வெற்றி பெற்றது.

ஆந்திராவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தேசய் அணியும், ஜூனி டோம்பிவிலி அணியும் மோதின. இதில் தேசய் அணி வெற்றிக்கு 1 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஜூனி அணியை சேர்ந்த இடது கை பந்து வீச்சாளர் ஒருவர் பந்து வீசினார். ஒண்ணா ரெண்டா தொடர்ந்து ஆறு பந்துகளை அவர் வைடாக வீசி 6 ரன்கள் தேவைப்பட்ட தேசய் அணிக்கு ஒரு பந்து மீதம்  இருக்கும் வகையில் வெற்றி பெற செய்தார் அந்த பந்து வீச்சாளர். பந்துவீச்சாளரை ஜூனி அணியின் சக வீரர்கள் வசை பாடி வறுத்தெடுத்தனர். இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது

News Counter: 
100
Loading...

youtube