பிரெக்சிட் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி..தெரசா மேவுக்கு தொடரும் சிக்கல்..!

share on:
Classic

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், 2-வது முறையாக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் 29 ஆம் தேதி பிரிட்டன் வெளியேற உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஐரோப்பிய கூட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், கடந்த ஜனவரி 15 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் பிரிட்டன் மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து, இந்த ஒப்பந்ததிற்கு ஆதரவாக 202 எம்பிக்களும், எதிராக 432 எம்பிக்களும் வாக்களித்தனர். 

இதனால், பிரதமர் தெரசா மேயின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது. எனினும் மனம் தளராத அவர், இரண்டாம் கட்ட முயற்சியாக ஐரோப்பிய கூட்டமைப்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒப்பந்ததில் சில திருத்தங்களை செய்தார். இதனையடுத்து, மீண்டும் இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 149 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தெரசா மே தோல்வியடைந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு இது சிறப்பான ஒப்பந்தமாகவே தாம் தொடர்ந்து நம்புவதாக தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sajeev