பதவி விலகினார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே..!

share on:
Classic

பிரெக்சிட் உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் தோல்வி ஏற்பட்டதால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலகினார்.

பிரெக்சிட் என்றழைக்கப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான செயல்திட்டத்தை நிறைவேற்ற பிரிட்டன் பிரதமர் தெரசா மே கடுமையாக முயற்சி செய்தார். எனினும், அவரது திட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்த போது, தொடர் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் விலகுவதற்கான காலக்கெடு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்ததைத் தொடந்து, அதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. எனினும், இந்த கடைசி அவகாசத்திலும், பிரக்சிட் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan