உயர்வுடன் முடிந்தது இன்றைய பங்குச்சந்தை..!!

share on:
Classic

நாள் இறுதியில் இன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.

இன்று மாலை நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்ந்து 36,636 புள்ளிகளிகளுடன் வர்த்தகம் முடிவுக்கு வந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 11,053 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

மேலும், தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு ஏற்றம் கண்டன. இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டாடா மோட்டார்ஸ், எஸ் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட், மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தன.

News Counter: 
100
Loading...

Ragavan