மேகதாது அணை கட்டப்படுவது உறுதி - கர்நாடகா திட்டவட்டம்

share on:
Classic

மேகதாது அணை கட்டப்படுவது உறுதி என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழக அரசின் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, பெங்களூருவில் கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. 

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கூறினார். 

அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் அதை மதிக்காமல், கர்நாடக அரசு முடிவில் உறுதியாக இருக்கிறது.

 

News Counter: 
100
Loading...

aravind