இந்தியாவிற்கு புதிய பெருமை தேடி தந்த பும்ரா..!

share on:
Classic

நடப்பு உலகக்கோப்பையில் அதிக மெய்டன் ஓவர் வீசிய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் பும்ரா பெற்றுள்ளார்.

12-வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டியில் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் இரண்டு ஓவர்களை மெய்டனாக புவனேஸ்வர் குமாரும் பும்ராவும் வீசினர். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக மெய்டன் ஓவர் வீசிய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் பும்ரா பெற்றுள்ளார். இவர் இதுவரை 9 மெய்டன் ஓவர் வீசியுள்ளார். 

இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 8 ஓவர்கள் மெய்டன் வீசி 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு பும்ராவின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது தவிர நடப்பு உலகக்கோப்பையில் முதல் பத்து ஓவரில் (பவர் பிளே) நியூசிலாந்து அணிக்கு 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து குறைந்த ரன்கள் மட்டும் கொடுத்த அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றுள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Saravanan