பும்ராவுக்கு ரூ.7 கோடி சம்பளம்... கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வளவு சம்பளமா...!

share on:
Classic

ஆண்டிற்கு ரூ. 7 கோடி சம்பளம் பெறும் A+ பிரிவிற்குள், கடுமையான போராட்டங்களுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பிடித்துள்ளார். 

வீரர்களுக்கு சம்பளம் எப்படி...?
திறமை மற்றும் அவர்களின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு A+, A, B, C போன்ற 4 பிரிவுகளின்கீழ் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு ஓராண்டு வீதம் கொடுக்கப்படும் ஊதியமானது மேற்கண்ட இந்த 4 பிரிவுகளின்கீழ் தான் வழங்கப்படும். A+ பிரிவில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், A பிரிவு வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், B பிரிவினருக்கு ரூ. 3 கோடியும், C பிரிவு வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் என ஆண்டு ஒப்பந்த ஊதியம் வழங்கப்படும். 2018 அக்டோபர் - 2019 செப்டம்பர் வரையிலான வீரர்கள் பிரிவு பட்டியலில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா உச்சபட்ச பிரிவை அடைந்து தற்போது சாதனை படைத்துள்ளார். 

பும்ராவின் மாற்றம் முன்னேற்றம்:
’சமீபத்திய போட்டிகளில் பலம் வாய்ந்த ஜாம்பவான் அணிகளை பந்தாடிய இந்திய பவுலர்’ என்ற பெருமை ஜஸ்பிரீத் பும்ரா வசம் உள்ளது. இந்திய அணியின் சிறந்த டெத் ஓவர் பவுலர் எனும் மகத்தான பெயருக்கு சொந்தமான பும்ரா தமது அபாரமான திறமையால் தற்போது A+ பிரிவிற்குள் நுழைந்துள்ளார். கேப்டன் விராத் கோலி மற்றும் ஹிட்-மேன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட 2 நட்சத்திரங்களை மட்டும் கொண்டிருந்த A+ பிரிவில் இப்போது 3-வது வீரராக கால் பதித்துள்ளார் பும்ரா. 

ஓரங்கட்டப்படுகிறாரா தோனி...?
தோனி இந்திய அணிக்கு என்னதான் சிறந்த கேப்டனாகவும், சிறந்த மேட்ச் ஃபினிஷராகவும் இருந்தாலும் அவர் கூட A+ பிரிவிற்குள் நுழைய இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை. கடந்த 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு 10 இந்திய வீரர்களுடன் தோனியும் என மொத்தம் 11 பேர் A பிரிவில் இடம்பெற்றிருந்தனர். இது தான் தோனி இடம்பிடித்திருந்த மிகப்பெரிய பிரிவாகும். 

ரூ. 5 கோடிக்கான A பிரிவு: 
தோனி, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஷிக்கர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் A பிரிவில் இடம்பிடித்துள்ளனர். 

ரூ. 3 கோடிக்கான B பிரிவு: 
அண்மையில், பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய  கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் B பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் B பிரிவில் இருக்கின்றனர். 

ரூ. 1 கோடிக்கான C பிரிவு: 
C பிரிவில் கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மானீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, விருத்திமான் சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

News Counter: 
100
Loading...

mayakumar