பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

Classic

பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வரும்17-ந் தேதி வரை தொடர் விடுமுறை  கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணி நிமித்தமாக தங்கி உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்கின்றனர்.

இதன் காரணமாக கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வழிப்பறி திருடர்கள் யாரேனும் உலா வருகிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம், மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind