ரஃபேல் விவாகரம்: சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்யும் மத்திய அரசு

share on:
Classic

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.

பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட முடிவில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், இதன் மூலம் அரசு கருவூலத்துக்கு இழப்பு நேரிட்டதாகவும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற விவாதங்களிலும், கட்சி பொதுக் கூட்டங்களிலும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய அரசும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தார். அவர் தணிக்கை செய்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind