கொளுத்தும் கோடை வெயிலில் குளு குளு மழை..!

share on:
Classic

கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம்  முழுவதும் பரவலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று 2 மணி நேரத்திற்கும் அதிகமாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில்  மார்த்தாண்டம், தக்கலை, அழகிய மண்டபம், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது. 

இதேபோன்று, வெப்பசலனம் காரணமாக ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

 

News Counter: 
100
Loading...

aravind