4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு..!

share on:
Classic

அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிராம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒட்டப்பிடாரத்தில் 15 பேர், சூலூர் தொகுதியில் 22 பேர், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேர், அரவக்குறிச்சியில் 63 பேர் என மொத்தம் 137 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan