மேற்கு வங்கத்தில் நாளை இரவு முதல் பிரசாரம் செய்ய தடை..!

share on:
Classic

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடித்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் மே 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அங்கு பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவின்போது மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதேபோல், பிரச்சாரத்துக்காக சென்ற பா.ஜ.க தலைவர் அமித் ஷா காரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளை இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan