மனநோயாளிகளுக்கும் சிகிச்சை கிடைக்குமா..? சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

share on:
Classic

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மன நோயளிகளுக்கும் சிகிச்சை அளிக்க கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "மாநில அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மன நோயளிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan