வேலூரில் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்..!

share on:
Classic

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

வேலூர் தொகுதியில் நிறுத்தப்பட்ட மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் நூர்முகமது, குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சண்முக சுந்தரத்திடம் வேட்புமனுவை வழங்கினார். அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்ட நிலையில் உறுதிப்பத்திரத்தை படித்துப்பார்த்த ஆட்சியர், பின்னர் அவரது வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind