வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!!

share on:
Classic

தேனியில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகளை தங்கதமிழ்செல்வன், ஈவிகேஎஸ் இளங்கோவன் இருவரும் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

தேனியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேனியில் பாராளுமன்றத் தேர்தல், கம்பம் தொகுதி மூன்றாம் சுற்றில் இரண்டு இயந்திரங்கள் பழுது காரணமாக முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டி மாறி இருப்பதாக கூறியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் தங்கதமிழ்செல்வன், ஈவிகேஎஸ் இளங்கோவன் இருவரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan