இணையதள ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த 'காப்பான்' டீசர்..!!

share on:
Classic

சூர்யா நடிப்பில் உருவான காப்பான் படத்தின் டீசர் வெளியாகி 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதள ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அயன், மாற்றான் போன்ற படங்களை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் 'காப்பான்'. காப்பான் படத்தில் சூர்யாவுடன் ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, மோகன்லால், சமுத்திரக்கனி, பூர்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த காப்பான்  படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா மற்றும் சமுத்திரக்கனி அவருடைய பாதுகாவலர்களாகவும் நடித்துள்ளனர். 

காப்பான் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நேற்று வெளியாகியது. இது வரை 3 மில்லியன் பார்வையார்களை கடந்து இணையதள ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடுத்துள்ளது . மேலும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan