ஆர்ச்சரின் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட கேரி..!

share on:
Classic

ஆர்ச்சரின் பவுன்சர் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் கேரி காயமடந்துள்ளார். 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பர்மிங்கா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிஞ்ச் 1 ரன்னிலும், டேவிட் வார்னர் 9 ரன்னிலும் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி களமிறங்கி நிதானமாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் ஆட்டத்தின் 8-வது ஓவர் வீச வந்தார் ஆர்ச்சர். அவர் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட கேரியின் ஹெல்மெட்டில் பந்து பட்டு அவரது தாடையை தாக்கியது. இதனால், அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. பின்னர் சிறிய அளவில் முதலுதவி செய்யப்பட்டு கேரி தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

News Counter: 
100
Loading...

Saravanan