முகச்சுருக்கத்தை நீக்கும் கேரட்...!!

share on:
Classic

முகச்சுருக்கத்தால் பலருக்கு இளம் வயதிலேயே வயதானவர் போல் தோற்றம் அளிக்கும். இதனால் அவர்கள் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். முகச்சுருக்கத்தை போக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம்.

முகச் சுருக்கத்தை போக்க கேரட் உதவுகிறது. முதலில் ஆலிவ் எண்ணெயினால் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை கழுவாமல் ஒரு காரட் சாற்றுடன் கடலைமாவு இரண்டு ஸ்பூன் எடுத்து அதை கலந்து பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரியும். அதே போல் இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து மசித்து முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பளபளக்கும். கேரட்டில் சர்க்கரை சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்திற்கு தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் ஏற்படும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு,கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி சருமத்தை அழகாக வைக்கும்.

News Counter: 
100
Loading...

vinoth