நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கு : ஜுலை 8-ஆம் தேதி விசாரணை..

share on:
Classic

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது.

துணை நடிகர்கள் பெஞ்சமின், சிங்காரவேலன், சிம்மராசு ஆகிய 3 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் வரை தபால் ஓட்டு வரவில்லை என்றும் நேரில் வந்த பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan