உபெர், ஓலா-வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

share on:
Classic

உபெர், ஓலா போன்ற நிறுவனங்களை முறைப்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சி.ஐ.டி.யூ.வை சேர்ந்த ராஜ்குமார் தொடர்ந்த வழக்கில் ஓலா, உபெர் நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை ​விட குறைவாக வசூலிப்பதாகவும், இதனால் ஆட்டோ தொழில் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, உபெர், ஓலா போன்ற நிறுவனங்களைப் போல, குறைந்த கட்டணங்களை வசூலித்தால், மனுதாரர் போன்ற ஆட்டோ ஓட்டுநர்களைத் தேடி பயணிகள் தானாக வருவார்கள் எனத் தெரிவித்தனர். எல்லா தொழில்களிலும் போட்டி இருக்கிறது என்பதால் குறைந்த கட்டணத்தில் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர உத்தரவிட முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

vinoth