துணி கடையில் தீ விபத்து ஏற்படுத்திய பாஜகவினர் மீது வழக்கு..!

share on:
Classic

திருச்சியில் பட்டாசு வெடித்து துணி கடையில் தீ விபத்து ஏற்படுத்திய பாஜவினர் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் கடைவீதியில், மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதில் அருகில் இருந்த துணி தைக்கும் தையல் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் பாஜக தொண்டர்கள்14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind