திமுக வேட்பாளர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனை மீது வழக்குப் பதிவு..!

share on:
Classic

மதுரையில் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சரவணன் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான மருத்துவமனை நரிமேடு பகுதியில் அமைந்துள்ளது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அந்த பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண்ணின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் காரணம் என கூறி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News Counter: 
100
Loading...

Ragavan