தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரிய வழக்கு : தமிழக தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவு

share on:
Classic

உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பாக தமிழக மின் வாரிய தலைமை பொறியாளர் வெளியட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படாததோடு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக மின்வாரிய தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, பணி நியமனம் என்பது இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதி தெரிவித்தார். மேலும், மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளி மாநிலத்தோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan