'மெரினா புரட்சி' திரைப்பட வழக்கில் மத்திய சினிமா தணிக்கை வாரியத்திற்கு புதிய உத்தரவு

share on:
Classic

மெரினா புரட்சி படத்தை வெளியிட அனுமதிப்பது தொடர்பாக, மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா புரட்சி படம் தயாரிக்கப்பட்டு 90 நாட்களாகியும் தணிக்கைக்கு முறையாக  உட்படுத்தபடாமல் உள்ளதாகவும், பொங்கல் திருநாள் அன்று திரைப்படத்தினை தணிக்கை செய்து  வெளியிட உத்தரவிடவேண்டும் எனக் கோரியும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், 2 முறை படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிப்பட்ட நிலையில், அதற்கான காரணம் முறையாக தெரிவிக்கவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், உண்மை சம்பவத்தின் அடிப்படையில்தான் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதனையடுத்து, மனுதாரர் தன்னிடம் உள்ள ஆவணங்களை 2 நாளில் சமர்பிக்க வேண்டும் என்றும், அதனை பரீசிலித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஒரு வாரத்திற்குள் படத்தை  வெளியிட அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind