7 அதிமுக அமைச்சர்கள் மேற்பார்வையில் பணப்பட்டுவாடா : திமுக புகார்

share on:
Classic

நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளில் ஏழு அமைச்சர்களின் மேற்பார்வையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சதய்பிரத சாகுவிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒட்டப்பிடாரம் தொகுதியில் இரவு நேரங்களில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, அதனை சரிசெய்வது போல் மின் துறைக்கு சொந்தமான வாகனத்தில் வந்து பணப்பட்டுவாடா செய்வதாக குற்றம்சாட்டினார். மேலும் 7 அமைச்சர்கள் தலைமையில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் தெரிவித்தார்

News Counter: 
100
Loading...

Ragavan