பணியில் சேர்ந்த இரண்டு மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட கால் நடை உதவி மருத்துவர்

share on:
Classic

திருத்தணியில் கால் நடை உதவி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மகன்காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் கால் நடை உதவி மருத்துவர் பணியில் சேர்ந்த இரண்டு மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டித்து, குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்., பாலாபுரம் அரசு  கால் நடை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் உதவி மருத்துவராக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News Counter: 
100
Loading...

aravind