பார்வையாளர்களை கவர்ந்த கால்நடை திருவிழா..!!

share on:
Classic

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் கால்நடை திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் பங்கேற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமத்தூர் கிராமத்தில் கொங்கு நாட்டு வேளாண் கால்நடைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து காரி, மயிலை, செவலை என காங்கயம் இன காளைகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றுள்ளன. நீளமான கொம்புகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் காளைகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். கம்பீரமான தோற்றம், திமில், பற்களை வைத்து சிறந்த காளைமாடுகளை நடுவர்கள் தேர்வு செய்தனர். கால்நடை திருவிழாவின் மூன்றாம் நாளான நாளை குதிரைகளுக்கான அழகு போட்டியும், நாட்டு நாய்களுக்கான அழகு போட்டியும் நடைபெறுகிறது. 

News Counter: 
100
Loading...

vinoth