”மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்..!”

share on:
Classic

 

தனிநபர் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய ராம்தாஸ் அதவாலே, இது தொடர்பாக கடந்த 1993-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியதில் இருந்து தற்போது வரை 620 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். உயிரிழப்புகள் பற்றி 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தகவல்களை அளித்து வருதாகவும், இதில் 144 உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 88 உயிரிழப்புகள் நேர்ந்ததாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த 6 ஆண்டுகளில் 53,598 தொழிலாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris