காவேரி கார்ட்டூன் டுடே : காலம் மாறியது..! காலும் மாறியது..!

share on:
Classic

லேடியின் காலில் விழுந்த காலம் போய் இப்போது டாடியின் காலில் விழும் காலம் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வரும் இவ்வேளையில், காலில் விழும் கலாசாரம் தவறு என்பதை வெளிக்கொணரும் விதமாக பிரதமர் மோடி  நடந்து கொண்டுள்ளார்.  

தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கியுள்ளதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரசாரம் வலுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று பிரச்சாரம் செய்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திநாத் குமாரை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

விழா மேடையில் வீற்றிருந்த மோடி எழுந்து நின்றதும் ரவீந்திரநாத் குமார் உட்பட அதிமுக தொண்டர்கள் பலரும் அவரது காலில் விழத் தொடங்கினர். ஆனால், "காலில் விழ வேண்டாம்" என தமது விரல்களை அசைத்தவாறு மோடி அன்புக்கட்டளை இட்டார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris