காவேரி கார்ட்டூன் டுடே : மோடி டாம் Vs. ராகுல் ஜெர்ரி

share on:
Classic

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளை கிண்டல் செய்யும் விதமாக பிரதமர் மோடி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 
ஸ்மார்ட் இந்தியா ஹாக்கதான் (Smart India Hackathon) என்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் டிஸ்லெக்சியா தொடர்பான திட்டத்தை பிரதமர் மோடியிடம் விளக்கிக் கொண்டிருந்தார், டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன்.  அவர்களுக்கு உதவும் திட்டம் ஒன்றில் ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன், என்று பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக ''உங்கள் திட்டம் மூலம் 40-50 வயது கொண்ட சில குழந்தைகளும் பயன் பெற முடியுமா? எனக்கு அப்படி ஒருவரை தெரியும்.  அந்த குழந்தைக்கு சிகிச்சை இருக்கிறது என்று தெரிந்தால், அவரின் அம்மா மிகுந்த சந்தோசம் அடைவார்'' என்று மோடி பேசினார். இது தற்போது பெரிய விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. குழந்தைகளுக்கு இருக்கும் ஒரு பாதிப்பை, குறைபாட்டை இப்படி கிண்டல் செய்வது எந்த விதத்தில் சரியானது. இதை வைத்தா காமெடி சொல்வது, என்று பலரும் மோடியை விமர்சித்து இருக்கிறார்கள்.
 

News Counter: 
100
Loading...

Ramya