காவேரி கார்ட்டூன் டுடே : தலைக்கவசம்..!

share on:
Classic

வழக்குகள் பதிவு செய்யாத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கின் முந்தைய விசாரணையில், தலையில் காயம்பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் என அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் என மாநகர காவல் ஆணையர் சார்பில் கோரப்பட்டது. 

அதன்பின், வாகனத்தின் பின்னால் அமர்பவர்கள் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் 100 சதவீத வழக்குகள் எங்கே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் வழக்குகள் பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Sari Maaris