பொடுகை விரட்டும் வேப்பம்பூ மேஜிக்

share on:
Classic

காய்ந்த வேப்பம்பூவில்  100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி இளம் சூடு பதத்திற்கு ஆறவிடவும்,. வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து மைல்ட் ஷாம்பூ போட்டு குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். முடிக்கு பளபளப்பு கிடைக்கும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள்,  இரண்டு முறை என இந்த எண்ணெய்யை தேய்த்து மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

வேப்பிலையை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் ஆறிய பிறகு தலை முழுவதும் அந்த தண்ணீரை தடவி அரை மணி நேரம் ஊற வைத்து ஓம்பீ போட்டு குளித்தால் பொடுகு போய்விடும்.

தலைக்கு குளிப்பதற்கு முன்பாக தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொண்டு 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் தலைமுடி சுத்தமான இருப்பதுடன் பொடுகு பிரச்சனை படிப்படியாக சரியாகும்.

சோற்றுக் கற்றாலை ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு அதில் சிறிது பால் கலந்து தலைமுடிக்கு தடவி றநன்றாக ஊற வைக்க வேண்டும். அரை அணி நேரம் கழித்து குளித்தல் தலை குளிர்ச்சி ஆவதுடன் பொடு தொல்லை குறையும்.

வெந்தயத்தை முந்தின நாள் அரவே ஊற வைத்து கொள்ள வேண்டும், அடுத்த நாள் கொஞ்சம் நீர் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து கொஞ்ச நேரம் ஊற வைத்து குளிக்க பொடுகு தொல்லை குறையும். சைனஸ், மற்றும் சளி பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்.

News Counter: 
100
Loading...

vijay