பட்டு போல முகம் வேணுமா.. அப்ப இத செய்யுங்க

share on:
Classic

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து கொள்ளவும். இந்த கலவையை பஞ்சில் முகத்தில் அவ்வப்போது ஒற்றி எடுக்க வேண்டும். பின்னர் லைட்டாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி  செய்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதோடு  தேன், ஓட்ஸ் பவுடர் போன்றவற்றை கலந்து,முகத்தில் தடவி  1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவினால் முகம் மென்மையாக இருக்கும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவாகும். வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும். 

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகி கன்னம் பளபளக்கும்.

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு கழுவினால் பளபளப்பு அதிகரிக்கும்.

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1 உலர்ந்த திராட்சை பழம்-10 .இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையோடு -அரைடீஸ்பூன் பப்பாளி பழக்கூழ் கலந்து  முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளலாம்.20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால்  சருமம் நன்றாக் பளீச்சென்று இருக்கும். 

News Counter: 
100
Loading...

vijay