ஒரே ஒரு ஆரஞ்ச் தோலில் அழகாகலாம் வாங்க...

share on:
Classic

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர வேண்டும். சில நாட்கள் கழித்து கண்கள் பளீச் ஆகிவிடும்.தூக்க குறைவால் கண்களில் ஏற்படும் சோர்வு நீங்கும். கரு வளையம் படிப்படியாக குறையும்.

கடலை பருப்பு,   பயந்தம் பருப்பு,வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, உலர்ந்த ஆரஞ்சு தோல், கசகசா - அனைத்தும் 200 கிராம் எடுத்து, மெஷினில்  அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் கமகமக்கும் 

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை. இவை அனைத்தையும் அரைத்து  இரவு தூங்கப் போகும்போது தினமும் பருக்கள் வந்த இடத்தில் பூச வேண்டும். இதனால் பரு வந்த வடு மறையும்.

வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, கண்களுக்கு கிழே பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.வாரம் இருமுறை செய்தால் கரு வளையங்கள் ஓடிவிடும்

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

News Counter: 
100
Loading...

vijay