காவேரி நியூஸின் மெகா சர்வே : தூத்துக்குடி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக.. 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், திமுக சார்பில் கனிமொழி, அமமுக சார்பில் டாக்டர் புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.எஸ் பொன்குமரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :

       வேட்பாளர்         சதவீதம்
 கனிமொழி (திமுக)  41%
 தமிழிசை சவுந்தரராஜன் (அதிமுக கூட்டணி)  36%
 டாக்டர் புவனேஸ்வரன் (அமமுக)  17%
 டி.பி.எஸ் பொன்குமரன் (மக்கள் நீதி மய்யம் )   6%

 

 

News Counter: 
100
Loading...

Ramya