மூச்சுதிணறல், தலைவலி, படபடப்பு அதிகம் உள்ளதா? அப்போ இது உங்களுக்கு தான் 'ஆச்சிஜன் அருமை'

share on:
Classic

மனிதன் பூமியில் உயிர்வாழ மிகவும் அவசியமானது ஆக்சிஜன், நீர், உணவு. இவற்றில் முதன்மையானது ஆக்சிஜன். மனிதன் நீர், உணவு இல்லாமல் 7 நாட்கள் வரை உயிர்வாழ முடியும், ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் நம்மால் 15 நிமிடங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது என்பதே சாத்தியம். அப்படிப்பட்ட ஆக்சிஜனின் மகத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். 

ஆக்சிஜன் இதில் தான் மனித உயிர்நாடியே உள்ளது. இந்த உலகில் ஆக்சிஜன் கிடைக்க பெரும் உதவியாக இருப்பவை கடல், மரம், செடிகள் போன்றவை தான். இதில் கடல் தான் மனிதன் உயிர்வாழ அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடுகிறது. காற்றில் உள்ள ஆக்சிஜனில் மலைபிரதேசங்களில் 16 முதல் 18 சதவீத அளவும், பனிமூட்டமான பகுதிகளில் 15 முதல் 17 சதவீத அளவும், வளிமண்டலம் மற்றும் வீடுகளில் 21 சதவீதமும், பனிமூட்டம் அடர்ந்த இடங்களில் 17 சதவீத அளவும் இருக்கும்.

நாம் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 18 முறை சுவாசிக்கிறோம். வயதின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும். நாம் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் களைப்பு, சோர்வு, அசதி, மயக்கம், தலைவலி, படபடப்பு, மூச்சுதிணறல் போன்றவை உண்டாகும். 

ஆக்சிஜன் நம் உடலில் 21 சதவீதம் இருந்தால் தான் நாம் ஆரேக்கியமாக இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம். சுத்தமான காற்று, சுகாதாரமான நீர், வைட்டமின்கள் நிறைந்த காய் மற்றும் பழங்களை உட்கொள்ளுவதன் மூலம் நாம் சீரான ஆக்கிஜனை பெற்று நீண்ட நாள் உயிர் வாழ முடியும்.

News Counter: 
100
Loading...

vijay