பிரசவமான பெண்களை எடையை குறைப்பது எப்படி? வயிறை குறைக்க பெல்ட் போடலமா? பிரச்சனைகளுக்கான தீர்வு

Classic

பிரசவத்திற்கு பின பெண்கள் உடல்ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பலான பெண்கள் பிரச்சனையாக இருப்பது உடல் எடைதான். அதை குறைக்க அவர்கள் பல வழிகளை கையாளுகின்றனர். சாப்பிடாமல் இருப்பது, தூங்கமல் இருப்பது போன்ற வீண் வழிகளை கையாளுகின்றனர்.

ஆனால் இதை செய்வதின் மூலம் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததா என்றால் இல்லை என்றே சொல்லாம்? பிரசவத்திற்கு பிறகு உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு பாலூட்டுவதே உடம்பை குறைப்பதற்கான எளிதான வழியாகும். பால் கொடுப்பதால் அதிகம் பசி எடுக்கும் என்பதால் மூன்று வேளை சாப்பிடுவதை ஆறு வேளையாக மாற்றி கொள்ளலாம். இதனால் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டனை தவிர்த்து சிக்கன், முட்டை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். 

குழந்தை பிறந்தவுடன் தாயின் உறக்க நேரம் குறையும். அதிக தூக்கமின்மையும் உடல் எடையை அதிகரிக்கும். ஆகையால் குழந்தைகள் தூங்கும் போதே  நீங்களும் தூங்கி ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் தவிர்ப்பது மிகவும் அவசியமானது. மனஅழுத்தம் இல்லாமல் இருந்தாலே பலவிதமான பிரச்சனைகளை தவிர்க்கலாம். மருத்துவரின் அறிவுரை உடன் நடைப்பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 

பிரசவத்திற்கு பின்னர் தங்களின் வயிறு பெருத்துவிடாமல் இருக்க சில பெண்கள் பெல்ட் போடுவது, துணிவைத்து கட்டுவது, வயிற்றில் தண்ணீரை கொண்டு அடிப்பது போன்ற சில தேவையில்லாத வழிமுறைகளை கையாளுகின்றனர். இவையெல்லாம் பயன் தராத செயல்களே ஆகும். இவற்றை செய்வதன் மூலம் நெல்லிக்காய் மூட்டைய அவிழ்த்து விட்டால் திசைக்கு ஒன்றாக சிதறுவது போல் வயிற்றின் தசைகளும் வழிந்துபோகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை அதிகம் கொழுப்புடைய எண்ணெய், நெய் ஆகியவற்றை தவிர்த்தாலே போதும். 

News Counter: 
100
Loading...

vijay