நண்பர்களுடன் ஒரு த்ரில் ட்ரிப் பேகானுமா? மறக்க முடியாத 'மசினக்குடி'

share on:
Classic

குளுகுளு ஊட்டி, ரம்மியமான கொடைக்கானல், சில்லுனு ஏற்காடுனு தான் நம்ம டுர் போயிருப்போம். ஆனா அடர்ந்த காடு, அபாயமான மிருகங்கள் அப்படினு ஒரு த்ரில் ட்ரிப் போகனும்னா, அதுக்கு ஏற்ற இடம் எது தெரியுமா? அது தான் ஊட்டிக்கு 30 கி.மீ தூரத்தில் இருக்கிற மசினக்குடி. இப்படி ஒரு அழகான இடத்த பற்றிய சில ஸ்வராஸ்ய தகவல்கள் உங்களுக்காக.... 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிற ஊட்டிக்கு 30 கீ.மீ தொலைவில் தான் இந்த மசினக்குடி கிராமம் உள்ளது.     மசினக்குடிக்கு போக வேண்டும்னா முதல் தமிழ்நாட்டு பார்டரா க்ராஸ் பண்ணி கர்நாடகா போகனும். அப்புறம் திரும்பா கர்நாடகா எல்லைய தாண்டி மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் வர வேண்டும். என்ன குழப்பமா இருக்கும் 2 மாநில எல்லைக்கு அருகில் இருப்பதால் தான் இந்த குழப்பமே.

முதுமலை தேசிய பூங்காவே நுழைவுவாயில கொண்டிருக்கிறது இந்த மசினக்குடி. மசினக்குடி உள்ள நுழையம் மிக உயர்ந்த மரங்கள், சில்லுனு காற்று, மிரட்டும் காட்டுயானை, அழகான மயில்கள், வித்தியாசமான காட்டுகுரங்குள், கண்களை கவரும் பறவை இனங்கள் என நம்ம என்ஜாய் பன்னுறதக்கு நிறைய இருக்கு.

மசினக்குடியில் முக்கியமா நம்ம  மிஸ் பண்ணாமா பார்க்க வேண்டிய இடங்கள் கொஞ்சம் இருக்கு. அதுல மோயார் வனப்பகுதி, சிங்காரா வனப்பகுதி, தெப்பகாடு யானைகள் முகாம், பொக்காபுரம் வனப்பகுதி, பந்திப்பூர் தேசிய பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மேலும் திகிலுக்கு கொண்டு செல்ல இங்குள்ள சிலர் காட்டுக்குள குடில் போட்டு இருக்காங்க. அத திகில் குடில் அப்படினு கூட சொல்லலாம். அது என்ன திகில் குடில்... அது வேற ஒண்ணுமில்ல காட்டுக்கு நாடுவுல உயர்ந்த மரங்களுக்கு மத்தியில் மரத்திலான குடில் போன்று வைத்து சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

சாப்பாடு, தண்ணீர்,  பாத்ரூம் அப்படினு எல்லாமே இந்த குடிலதான். காலையில காட்டின் அழகு, மிருங்களின் நடமாட்டம் ஆகியவற்றை பார்த்து ஜாலியாக இருந்தாலும், இரவு நேரங்களில் மிகவும் அச்சுறுத்தலாகவே இருக்கும். மிருங்கங்கள் ஏதும் வந்து தாக்காத அளவிற்கு இந்த குடில் இருந்தாலும், உரிய அனுமதி பெற்ற இந்த குடில்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. 

நண்பர்களுடன் சென்று  ஜாலியா பொழுதுபோர்க்கவும், ஒரு த்ரிலிங்கான திரிப்பாகாவும் மசினக்குடி கண்டிப்பாக இருக்கும். மசினக்குடிக்கு சுற்றுலாவிற்கு வந்து சென்றவர்களின் வாய்களிலிருந்து ஒரே வார்த்தை இது ஒரு வித்தியாசமான அனுபவமா தான் இருக்கு என்பதே தான்......
 

News Counter: 
100
Loading...

vijay