இன்று ஒக்கேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர்..!

share on:
Classic

கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று ஒக்கேனக்கலை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 9ம் தேதி டிவிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தார்.தமிழகத்திற்கு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக இன்று ஒக்கேனக்கலுக்கு வந்தடையும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தண்ணீர் நாளைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan