இன்று கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்..!

share on:
Classic

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் இன்று டெல்லியில், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் கூடுகிறது.

மே-28 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை ஜூன் 7 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்திலும் தமிழகம் அரசு வலியுறுத்தியது. ஆனால் தற்போதுவரை 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு  திறந்துவிடவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மைக் ஆணையக் இன்று டெல்லியில் அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் கூடுகிறது. இதில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதம் திறக்கவேண்டிய நீரை முழுமையாக திறக்க வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind