சிபிஐ அதிகாரி பணியிடமாற்றம் : உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரிய நாகேஸ்வரராவ்

share on:
Classic

பீகார்  காப்பக பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரியை பணியிடமாற்றம் செய்ததற்காக, உச்சநீதிமன்றத்திடம் நாகேஸ்வர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

பீகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள காப்பகங்களில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.சர்மா தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. சிபிஐ இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்ற நாகேஸ்வர ராவ், ஏ.கே.சர்மாவை மத்திய ரிசர்வ் காவல் படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, பிகார் காப்பக பாலியல் வன்கொடுமை வழக்கை ஏ.கே.சர்மா மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், அவரை பணியிடமாற்றம் செய்தது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்தனர். மேலும், நாகேஸ்வர ராவ், இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். நாகேஸ்வர ராவ் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள நிலையில், அவர் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind