5 இடங்களில் வெடிகுண்டு..CNN நிறுவனத்துக்கு போனில் வந்த மிரட்டல்..!

Classic

சி.என்.என். செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல செய்தி நிறுவனமாக சி.என்.என். நிறுவனத்திற்கு நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  

அந்த அழைப்பில் பேசிய நபர், அலுவலக கட்டிடத்தில் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததை அடுத்து, அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அலுவலவகம் முழுவதும் தேடியதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. 

இதையடுத்து பிரச்சினை எதுவும் இல்லை எனவும் காலை வழக்கம் போல் அலுவலகம் வரலாம் எனவும் சி.என்.என். நிறுவனம் தனது ஊழியர்களுக்கு  குறுந்தகவல் அனுப்பியது. சி.என்.என். நிறுவன கட்டிடத்திற்கு வெளியே வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

 

News Counter: 
100
Loading...

aravind