கொலைகாரனுக்கு கிடைத்த வெற்றி...!

share on:
Classic

கொலைகாரன் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி,  ஹிரோவாக அவதாரம் எடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துவருபவர் விஜய் ஆண்டனி, இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கொலைகாரன் படம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி"க்கு ஜோடியா ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தியா மூவிஸ் சார்பாக ப்ரதீப் தயாரித்த இந்த கொலைகாரன் படத்தை ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியிருந்தார். கடந்த 7 ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கொலைகாரன் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

News Counter: 
100
Loading...

Padhmanaban