’பேட்ட‘ குறித்து திரை பிரபலங்கள் என்ன சொல்றாங்க..?

share on:
Classic

பேட்ட படத்திற்கு பல்வேறு திரைப்பட பிரபலங்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணனன்:

“பேட்ட படம் மிகப்பெரிய வெற்றி அடைய கார்த்திக் சுப்புராஜ், அனிருத் மற்றும் பேட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். “ரஜினியின் அற்புதமான திறமை வெளிப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

சூரி:

“ரசிகர்களின் வேட்ட, சூப்பர் ஸ்டாரின் பேட்ட” என்று பதிவிட்டுள்ள நடிகர் சூரி, கார்த்திக் சுப்புராஜ்,அனிருத்,விஜய் சேதுபதி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன்:

பேட்ட படக்குழுவினருக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் சுசீந்திரன் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சிம்ரன்:

“மறக்க முடியாத நாள், என் கனவை நனவாக்கிய கார்த்திக் சுப்புராஜ் - க்கு நன்றி,பேட்ட படம் குறித்து தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன” என்று தெரிவித்துள்ள நடிகை சிம்ரன் பேட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ராகவா லாரன்ஸ்:

 “நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க தலைவரின் ஸ்டைலான படம் பார்த்தேன், படத்தை மிகவும் ரசித்தேன், தியேட்டரில் கத்தி கத்தி என் தொண்டை வலிக்கிறது, எல்லா தலைவர் ரசிகர்களும் இதையே உணர்ந்திருப்பார்கள்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

aravind