ஜம்மூவில் மீண்டும் செல்போன் சேவைகள் துவக்கம்..!!

share on:
Classic

ஜம்மூகாஷ்மீரில் 5 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் செல்போன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ வை ரத்து செய்து மத்திய அரசு உத்திரவிட்டது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க ஜம்மூ காஷ்மீர் முழுவதும் இனையதள சேவைகள் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.

மேலும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். தற்போது அந்த பகுதியில் அமைதியான சூழல் நிகழ்வதால் காஷ்மீரில் விதிக்கப்பட்ட கடும் கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், ஜம்மூவின் தோடா, கிஸ்துவார், ரம்பான், ராஜோரி மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் செல்போன் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan